கற்கை Karkkaiகற்கை Karkkai
வினா 25மெயின்ஸ் விடை எழுதுதல்Mainspolitical representation of woman

The political representation of woman is very poor in India / பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் இந்தியாவில் மிகவும் குறைவாக உள்ளது

கற்கை குழு17 Nov 20261 நிமிட வாசிப்பு
பொருளடக்கம்
  1. தற்போதைய உண்மைகளும் தரவுகளும்

தற்போதைய உண்மைகளும் தரவுகளும்

முன்னுரை:


  • விடுதலை அடைந்து 72 ஆண்டுகள் கடந்த பின்னரும் நம் நாட்டில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் சிறப்பான அளவில் இன்னும் முன்னேறவில்லை.
  • ஐ.நா. பெண்கள் அறிக்கையின் படி, லோக் சபையில் 64 பெண் எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 27 பெண் எம்.பி.க்களும் மட்டுமே உள்ளனர்.
  • 2017-18 ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வானது நாட்டில் முடிவெடுக்கும் திறன் கொண்ட அதிகார அமைப்புகளில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று கூறுகிறது. மக்கள்தொகையில் 49 சதவீதத்தை கொண்டிருந்தாலும் அவர்களின் அரசியல் பங்கேற்பு என்னவோ மிகவும் குறைவாகவே உள்ளது என்று அவ்வறிக்கை கூறுகிறது.


காரணங்கள்:

  • உள்நாட்டுப் பொறுப்புகள், சமுதாயத்தில் பெண்கள் தொடர்பாக நிலவும் கலாச்சார அணுகுமுறைகள் மற்றும் குடும்பத்தின் ஆதரவின்மை போன்ற காரணிகள் அவர்களின் அரசியல் பங்கேற்பைத் தடுக்கும் முக்கிய காரணங்கள் ஆகும்.
  • சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலில் மொத்த வேட்பாளர்களில் 10% பெண்கள் என்றும் கடந்த ஆண்டு உத்திரப்பிரதேச தேர்தலில் பங்கு பெற்றவர்களில் 9.2% பெண்கள் வேட்பாளர்கள் மொத்தம் 10% இடங்களை வென்றுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. இவையெல்லாம் மிக குறைவான மதிப்புகளாகும்.
  • நம்பிக்கையின்மை மற்றும் நிதி பற்றாக்குறை ஆகியவை பெண்களை அரசியலில் நுழைவதைத் தடுக்கும் மற்ற முக்கிய காரணிகளாகும்.
  • தேர்தலில் வெற்றி பெற பணம் மற்றும் வலிமை போன்றவற்றை ஆண்கள் பயன்படுத்துகின்றனர். அரசியல் கட்சிகள் பாலினத்தை விட குறிப்பிட்ட தொகுதிக்கான செல்வாக்குள்ள வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதை தான் ஒரு முக்கிய காரணியாகக் கொள்கின்றன.


முன்னோக்கிய பாதை:

  • தற்போதைய நிலையில் நாடு முழுவதும் உள்ள மொத்த கிராம பஞ்சாயத்துகளில் பெண்கள் சமூகத்தின் பங்களிப்பு 43 சதவீதமாக உள்ளது. இது உள்ளூர் மட்ட அரசியலில் பெண்களின் சிறந்த தலைமைப் பண்பை வெளிப்படுத்துகிறது. இந்நிலை மாநில மற்றும் தேசிய மட்டத்திலும் பிரதிபலிக்க வகை செய்ய வேண்டும்.
  • 2017 ல் பாராளுமன்றத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமான பெண் பிரதிநிதிகளைக் கொண்ட ருவாண்டா போன்ற வளரும் நாடுகளிலிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும். நமது பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றுவதும் மிக மிக அவசியமான ஒன்றாகும்.
  • முடிவெடுக்கும் செயல்பாடுகளில் (decision making process) பெண்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பது, சமூகத்தில் அனைத்து குடிமக்களிடையேயான வாய்ப்புகளில் சமத்துவ போக்குடன் ஒரு முற்போக்கான சமுதாயத்தை உருவாக்குவதற்கு மிகவும் அவசியமானதாகும்.


இதற்கு பெண்கள் பங்கேற்பை அனைத்து மட்டங்களிலும் வலுப்படுத்துவது மிக இன்றியமையானது ஆகும்.

குறிப்பு: political representation of woman

எதிர்பார்க்கப்படும் வினா150 சொற்கள்10 மதிப்பெண்கள்PAPER 1

The political representation of woman is very poor in India. Identify the potential reasons for it. / பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் இந்தியாவில் மிகவும் குறைவாக உள்ளது. அதற்கான காரணங்களை அடையாளம் காணவும்.

பகிர்:WhatsAppTelegram

தொடர்புடையவை · Social Issues