கற்கை Karkkaiகற்கை Karkkai
வினா 23மெயின்ஸ் விடை எழுதுதல்Mainsslum free Indiaslums

slum free India

கற்கை குழு10 Nov 20261 நிமிட வாசிப்பு
பொருளடக்கம்
  1. குடிசைகள் இல்லாத இந்தியாவை உருவாக்க பொருத்தமான நடவடிக்கைகள்

குடிசைகள் இல்லாத இந்தியாவை உருவாக்க பொருத்தமான நடவடிக்கைகள்

முன்னுரை:

  • 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பானது, இந்திய நகரங்களில் உள்ள 33,500 குடிசை பகுதிகளில் (சேரிப் பகுதிகள்) மொத்தம் 65.5 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள் என தெரிவிக்கிறது.
  • இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சரியான வாழ்வாதாரம் இல்லை. குறிப்பாக வாழ்க்கை நடத்த ஆரோக்கியமான இடம், தொழில் வாய்ப்பு மற்றும் குறைந்த வருமானம் போன்றவற்றால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • நகரமயமாக்கல் வேகமாக அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் குடிசைப் பகுதிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.

தேவையான நடவடிக்கைகள்:

  • குடிசைப் பகுதிகள் இல்லாத நகரங்கள் உருவாக்க மூன்று முனை அணுகுமுறை தேவைப்படுகிறது:

1. முதலாவதாக, குடியிருப்பாளர்களுக்கு தெளிவான முகவரி வழங்குவதன் மூலம் அவர்கள் தங்கள் உடமைப் பொருளை, ஒரு உறுதியான சொத்தாகப் பயன்படுத்த வாய்ப்பாக அமையும்.

2. இரண்டாவதாக, அந்த பகுதிகளில் உள்ள உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துதல். தனிப்பட்ட வீடுகளுக்கும் குடிநீர், மின்சாரம் மற்றும் கழிவுநீர் இணைப்புகளை வழங்குதல், திடக்கழிவுகள் சேகரித்தல், தெரு விளக்குகள், காவலர்கள் மற்றும் மற்ற பாதுகாப்பு சேவைகளின் ஆதரவை வழங்கல்.

3. மூன்றாவதாக, அதிக அடர்த்தி குறை வருமான மண்டலத்தை உருவாக்குதல். இது தனிப்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்கள் வீடுகளை ஆபத்து இல்லாமல் மேம்படுத்தவும் மேலும் உள்ளூர் சொத்துகளை வேலைவாய்ப்பை வழங்கும் முறையான வணிக நிறுவனத்திற்கு வாடகைக்கு விடவும் அனுமதிக்கிறது.

முடிவுரை:

  • இறுதியாக குடிசைப் பகுதிகளை ஆரோக்கியமான அண்டைப் பகுதிகளாக மேம்படுத்துவது ஒரு ஆரோக்கியமான சமூக மற்றும் பொருளாதார அணுகுமுறையாகும்.
  • உண்மையில் இதன் மூலம் குடிசைப் பகுதிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும்.

குறிப்பு: slum free India

எதிர்பார்க்கப்படும் வினா150 சொற்கள்10 மதிப்பெண்கள்PAPER 1

Millions of Indians are finding it difficult to meet their ends in slums. Suggest suitable measures to create a slum free India. / மில்லியன் கணக்கான இந்தியர்கள் குடிசைப் பகுதிகளில் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளனர். குடிசைகள் இல்லாத இந்தியாவை உருவாக்க பொருத்தமான நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும்.

பகிர்:WhatsAppTelegram

தொடர்புடையவை · Social Issues